வாய்ப்பேச முடியாததை - ஒரு
குறையாக நினைத்ததில்லை - என்றும்
பேசுவதை விட
மௌனமே மேலானது
ஊமை என்ற கேளியம்
ஊனம் என்ற கிண்டலும்
என் செவிகள் தாண்டி - மனம்
உள்ளே சென்றதில்லை
வாய்ப் பேசமுடியாமையை
ஒரு வரமாகவே நினைத்தேன்
வீண்ப் பேச்சுக்கள் , வெட்டி அறட்டைகள்
ஏதும் எனக்கு தெரியாது
நான் சொல்ல நினைப்பதை
ஒரு சிறுப் புன்னகையும்
என் விரல் அசைவுகளும் சொல்லிவிடும்.
தினமும் மவ்ன விரதம் இருக்கும் - தேவதை நான்
மௌனம் ஒரு தவம்
மௌனம் ஒரு சாதனம்
மௌனம் ஒரு யாகம்மௌனம் ஒரு வழிப்பாடு
முதல் முதலின்
நான் ஊனம் , நாம் ஊமை , நான் குறை உள்ளவள்
என்று எனக்கு தோன்றுகிறது
என்னை நினைத்து
முதன் முதலில் வருந்துகிறேன்
நான் ஏன் பிறந்தேன் - என்று
என்னையே நான் சபிக்கிறேன்
அழுகின்ற உன்னை
சமாதானப் படுத்த முடியாமல்
ஆறுதல் சொல்ல முடியாதவளாய்
கண்ணீர் மட்டும் சிந்தும் - மரமானேன்
என் மனதை புழியும்
உன் அழுகைக்கும் , உன் கண்ணீருக்கும்
என்னிடம் பதில் இல்லை
என் கண்ணீரே அதற்கு - சாட்சி
அம்மாவை மன்னித்துவிடு - மகனே
உனக்கு நான் தாலாட்டு பாடியதில்லை
ஒன்றுமே பேசியதில்லை
ஆ , ஊ , ம் அதற்க்கு மேல்
எனக்கொன்ரும் பேசவும் முடியாது
அழுகிற உன்னை ஆறுதல் படுத்த
எனக்கொரு வழியும் கிடையாது
நான் ஒரு ஊமை , நான் ஒரு ஊனம்
என்னை மன்னித்து விடு
No comments:
Post a Comment