யாழ்_அகத்தியன் - - -ஈழத்து அகதியாய் நான்
அம்மா அங்கே
அம்மாக்காக அகதியாய்
இங்கே நான்
*
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக
*
தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்
*
*
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால் அம்மா
கவலையாய் பேசுவதை கேக்கவே
நேரம் முடிந்துடும்
*
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்
என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று
*
எப்ப அம்மா சொந்த ஊருக்கு
போவோம் பொறு போவோம்
இருபது வருசமா இதைத்தானே
அம்மா சொல்கிறாய்
*
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்
*
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vvYl8bD4DsmoxbNJnMoAZajm4EM-U1IJpN_Z8y30XHp_rNdkUOv9Dby5aRd-KrqgE9V7vLMfN2-g3OGHbsKHwC7fDO_xPan5SVe2dvtHDS_fAXk3w=s0-d)
சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான ஒத்திகை
மகனே
No comments:
Post a Comment