Tuesday, September 20, 2011

எதிலும் வெல்வோம்

பேச முன் யோசியுங்கள்....!!!!

செய்ய முன் நிதானியுங்கள்....!!!!

முயல முன் திட்டம் போடுங்கள்....!!!!

முழு மூச்சாய் செய்து முடியுங்கள்....!!!!

இன்று முடியாவிட்டால் என்று முடியும்....???

உன்னால் முடியாவிடால் யாரால் முடியும்....???

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்


--

Monday, September 19, 2011

உன் மனம் என்னும் வீட்டில்

 என்னை குடி ஏற்றி வைத்திருக்கிறாயா

 என்று எனக்கு தெரியவில்லை !!

 ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்

 உன் வீட்டை விட்டு உன்னால் வரமுடியாதென்று!!

 பரவாயில்லை காத்திருக்கிறேன் 

உன் மனக் கதவின் வெளியே !!!!

-

ஏன் பிடிக்க வில்லை


ஒரு நாள் மட்டும்
 வாசம் தரும் 
பூக்களை பிடிக்கும் பெண்களுக்கு,
 வாழ்நாள் முழுதும்
 பாசம் காட்டும் 
ஆண்களை ஏன் பிடிக்க வில்லை








காலை வணக்கம் நண்பர்களே..

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே..

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே..

மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே..

மலரே சோம்பல் முறித்து எழுகவே..

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில் 

உலகம் விடியட்டுமே குழந்தையின் பூமுக சிரிப்பில்...

காலை வணக்கம் நண்பர்களே..


--
Thanks and Regards
Thanigaivel.S
91-9790454819/9095559910

Sunday, September 18, 2011

உன் அன்புக்காக !!!..

காலங்கள்


 சென்றாலும் 


கனவுகள் முடிந்தாலும் 


கவிதைகள் அழிந்தாலும் 


காற்றோடு


 தொடர்ந்து வருவேன்


 உன் அன்புக்காக !!!..

உன் இதயமானேன்

எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்


என்று இறைவனிடம் கேட்டேன்!

உன் இமைகளாகச் சொன்னான்,

உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன்!!

... கண்களாகச் சொன்னேன்!

கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்!!

உன் உயிராகச் சொன்னான்

பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்

என்று உதிர்ந்து விட்டேன்!!

பின்புதான் உன் இதயமானேன்

என்றும் உனக்காக

துடித்துக் கொண்டு இருக்க!!!!!!!!



உன் அன்புக்காக !!!..

காலங்கள் சென்றாலும்


கனவுகள் முடிந்தாலும்

கவிதைகள் அழிந்தாலும்

காற்றோடு தொடர்ந்து வருவேன்

உன் அன்புக்காக !!!..

--

பிரிந்து இருக்கும் நாட்களில்

நீ எனைப் பிரிந்து
இருக்கும் நாட்களில் 

எல்லாம் வெகு சீக்கிரத்தில்

 தூங்கப் போய்விடுகிறேன்..!

 ஏனெனில்... 

கனவினில் உன்னோடு

 சேர்ந்திருக்க வேண்டும்

 என்பதற்காக..!



நட்பா? காதலா?


நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?


நண்பன் கேட்டான்

... நான் முதலில் கற்றுக் கொண்டது

நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது

நட்பு தான்

என்னை நானாக பார்த்தது

நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்

நட்பு தான்

எனினும்

எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது

காதல் தான்

எனவே,

நட்பின் காதலும்,

காதலின் நட்பும்.



Saturday, September 17, 2011

Nithiyananda's Final word






Fw: முன்னாள் சிநேகிதிகள்......A Guys view!!


 முன்னாள் சிநேகிதிகள்......A Guys view!!


போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை...

 

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்...

மூன்று வேளைகளும்
'சாப்பிட்டாயா?' என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது...

என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!

 

திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்...
அவளோ
'அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்...
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!

 

இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?

பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!

 

ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்...
'நீயாவது சிநேகிதர்களுடன்

தொடர்பில் இருக்கிறாயா?'
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது

 

-----------------------------------------------------------------

என்றும் உனக்காக ...

எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்



என்று இறைவனிடம் கேட்டேன்!



உன் இமைகளாகச் சொன்னான்,



உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன்!!


 கண்களாகச் சொன்னேன்!


கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்!!



உன் உயிராகச் சொன்னான்



பிரிந்து விட்டால் இறந்து விடுவாய்



என்று உதிர்ந்து விட்டேன்!!



பின்புதான் உன் இதயமானேன்



என்றும் உனக்காக



துடித்துக் கொண்டு இருக்க!!!!!!!!

















உன் அன்புக்காக !!!

காலங்கள் சென்றாலும்

கனவுகள் முடிந்தாலும்

கவிதைகள் அழிந்தாலும்

காற்றோடு

தொடர்ந்து வருவேன்

உன் அன்புக்காக !!!..

Tuesday, September 6, 2011

மௌனம் ஒரு தவம்





வாய்ப்பேச முடியாததை - ஒரு
குறையாக நினைத்ததில்லை - என்றும்
பேசுவதை விட
மௌனமே மேலானது

ஊமை என்ற கேளியம்
ஊனம் என்ற கிண்டலும்
என் செவிகள் தாண்டி - மனம்
உள்ளே சென்றதில்லை

வாய்ப் பேசமுடியாமையை
ஒரு வரமாகவே நினைத்தேன்
வீண்ப் பேச்சுக்கள் , வெட்டி அறட்டைகள்
ஏதும் எனக்கு தெரியாது

 நான் சொல்ல நினைப்பதை
ஒரு சிறுப் புன்னகையும்
என் விரல் அசைவுகளும் சொல்லிவிடும்.
தினமும் மவ்ன விரதம் இருக்கும் - தேவதை நான்

மௌனம் ஒரு தவம்
மௌனம் ஒரு சாதனம்
மௌனம் ஒரு யாகம்
மௌனம் ஒரு வழிப்பாடு

முதல் முதலின் 
நான் ஊனம் , நாம் ஊமை , நான் குறை உள்ளவள்
என்று எனக்கு தோன்றுகிறது

என்னை நினைத்து 
முதன் முதலில் வருந்துகிறேன்
நான் ஏன் பிறந்தேன் - என்று
என்னையே நான் சபிக்கிறேன்

அழுகின்ற உன்னை
சமாதானப் படுத்த முடியாமல்
ஆறுதல் சொல்ல முடியாதவளாய்
கண்ணீர் மட்டும் சிந்தும் - மரமானேன் 

என் மனதை புழியும்
உன் அழுகைக்கும் , உன் கண்ணீருக்கும்
என்னிடம் பதில் இல்லை
என் கண்ணீரே அதற்கு - சாட்சி 


அம்மாவை மன்னித்துவிடு - மகனே
உனக்கு நான் தாலாட்டு பாடியதில்லை
ஒன்றுமே பேசியதில்லை
ஆ , ஊ , ம் அதற்க்கு மேல்
எனக்கொன்ரும் பேசவும் முடியாது

அழுகிற உன்னை ஆறுதல் படுத்த
எனக்கொரு வழியும் கிடையாது
நான் ஒரு ஊமை , நான் ஒரு ஊனம்
என்னை மன்னித்து விடு


Monday, September 5, 2011

என் இதய துடிப்பை கேட்டு பார்...

சகியே !!!


அன்பே என் இதய துடிப்பை கேட்டு பார்


உன் பெயரையே! அணு தினம் உச்சரிக்கின்றது


அன்பே விளையாட்டுக்காகவேனும் உன் பெயரை மாற்றிவிடாதே !


என் இதய துடிப்பில் இருந்து உன் பெயரை பிரிக்க முடியாது....

நட்பு...

நட்பு எனும் தாகத்தை


தீர்ப்பது போன்றே இருக்கும்


உண்மையில்


இணையதளத்து


நண்பர்களில் பலர்


கானல் நீர்


போன்றவர்கள் ...


இனிய காலை வணக்கம் நண்பர்களே

இதயம் ...

நீ விரும்பும்


இதயம்


உன்னை


தவிக்க விட்டு


செல்லும்


போதுதான் - நீ


தவிக்க விட்டஇதயத்தின்


வலி புரியும்.

தோற்பதற்கு நான்தயார்...

எத்தனைமுறை 


வேண்டுமானாலும்


 தோற்பதற்கு 


நான்தயார்... 


இறுதிஎன்று 


வரும்போது இவன்தான்


 வெல்லவேண்டும் ...


 என்முயற்சி


 தோற்றுவிட்டால்


 முயற்சிஎன்ற


 வார்த்தைஅழியும்...


 இறைவன்ஒருவன்


 இருக்கானென்ற 


நம்பிக்கையே


 முழுதும்மறையும்...