Friday, June 24, 2011

புலவர் சா இராமாநுசம் எழுதிய கவிதை


முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை 
               ஓயாத அழுகுரலே  ஈழ  மண்ணில்-தினம்
                 ஒலிக்கின்ற நிலைகண்டு  அந்தோ  கண்ணில்
        காயாது  வந்ததன்று  கண்ணீர்  ஊற்றே-அதைக்
                 காணாமல் மறைத்ததந்தோ  தேர்தல் காற்றே
        சாயாத  மனத்திண்மை   கொண்டோர்  கூட-ஏனோ
                 சாயந்தார்கள்  பதவிக்கே  ஓட்டு  தேட
         வாயார  சொல்லுகின்ற கொடுமை  அன்றே-அது
                 வரலாற்றில்  என்றென்றும்   மறையா  ஒன்றே
 
         கொத்துமலர்  வீழ்வதுபோல்   வன்னிக  காட்டில்-ஈழ
               குடும்பங்கள்  வீழ்வதனை  கண்டு   ஏட்டில்
        முத்துகுமார்   முதலாக  பலரும்  இங்கே-தீ
                 மூட்டியவர்  உயிர்துறந்தும்  பலன்தான்  எங்கே
        செத்துவிழு   மவர்பிணத்தை  எடுத்துக்  காட்டி-ஓட்டு
                 சேகரிக்க  முயன்றாராம்  திட்டம்  தீட்டி
      எத்தர்களும்  ஐயகோ கொடுமை  அன்றோ-அது
                 எதிர்கால  வரலாற்றில்  மறையா   தன்றோ
  
         வீரத்தின்   விளைநிலமே  ஈழ  மண்ணே-மீண்டும்
                 வீறுகொண்டே  எழுவாய்நீ  அதிர  விண்ணே
        தீரத்தில்   மிக்கவராம்  ஈழ  மறவர்-எட்டு
                 திசையெங்கும்  உலகத்தில்  வலமே  வருவார்
        நேரத்தில்  அனைவருமே  ஒன்றாய்   கூடி-தாம்
                நினைத்தபடி   தனிஈழப்   பரணி  பாடி
கூறத்தான்  போகின்றார்   வாழ்க  என்றே-உள்ளம்
                   குமுறத்தான்  சிங்களவர்  வீழவார்  அன்றே
இரக்கமெனும்  குணமில்லார்   அரக்கர்   என்றே-கம்பர்
                 எழுதியநல்   பாட்டுக்கே  சான்றாய்   இன்றே
         அரக்கனவன்  இராசபக்சே  செய்யும்   ஆட்சி-உலகில்
                 அனைவருமே  அறிந்திட்ட  அவலக்   காட்சி
         உறக்கமின்றி  ஈழமக்கள்   உலகில்  எங்கும்-உள்ளம்
                   உருகியழ  வெள்ளமென  கண்ணீர்  பொங்கும்
        தருக்கரவர்  சிங்களரின்  ஆட்சி  அழியும்-உரிய
                   தருணம்வரும்  தனிஈழம்  மலர்ந்தே   தீரும்
அழித்திட்டோம   தமிழர்களை  என்றே  கூறி-சிங்களர்
                    ஆலவட்ட   மாடினாலும்  அதையும்   மீறி
           கழித்திட்ட  காலமெல்லாம்  துன்பப்   படவும்-சில
                    கயவர்களாம்   நம்மவர்கை   காட்டி  விடவும்   
           விழித்திட்டார்  உலகுள்ள  ஈழ  மறவர்-அதன்
               விளைவாக  அணிதிரள  விரைந்தே  வருவார்
             செழித்திட்ட  வளநாடாய்  ஈழம்  மாறும்-இரத்தம்
                        சிந்தாமல்  தனிஈழம்  மலர்ந்தே  தீரும்
                
                                                  

திருடிய கவிதை


இயற்கையே உன்னிடம்
இருந்து தான் திருடுகிறேன்
எனது கவிதைகளை
இப்படியாய்..!
மறையும் சூரியன், அதனை
தொடாமல் தொடும்
கடல்..!
மழை நின்ற பின் 
தொடரும் ஒரு
நிசப்தம்..!
இருண்ட வானத்தில் மூன்றாம்
நாள் பிறை
நிலா..!
குளத்துக் கரையில் உணவுக்காய்
துள்ளி வரும்
மீன்கள்..!
பச்சைப்புல் வெளியின் மூடு
பனி விட்டு சென்ற
வேர்வை..!
தொடர்ந்து வரும் மேக
கூட்டங்களை குளிரச்செய்யும்
மலை..!
குளிர் காலையின் வெது
வெதுப்பான சூரியன்..!
சுடும் சூரியனுக்கு எதிராய்
நீ பொழிய செய்யும்
மழை..!
தென்றலில் இயற்கை
விட்டு செல்லும்
வாசம்..!
நீ ப(டி)டைக்கின்றாய் 
தினந்தோறும் அழகிய
கவிதைகளை எங்களுக்காய்..

Monday, June 13, 2011

என்றும் பெண்ணுக்கழகு






திறந்த மனதும்
மூடிய உடலும்
திறந்த அறிவும்
மூடிய வாயுமே

என்றும் பெண்ணுக்கழகு

இறையே இன்பமே





இருக்கின்ற ஒன்றின்
இருப்பிடம் நாடி
இருவிழிம் மூடி
இருட்டினில் தெடுகிறேன்...

இம்மைக்கும் மருமைக்கும்
இனிய வாழ்வுக்கும்
இன்றியமையாத
இறையே இனிமையே

இருக்கின்ற இடத்திலிருந்து
இம்மியும் அசையாமல்
இன்றும் தேடுகிறேன்
இறைவா உன்னை

காதல்




காதலிப்பதை விட
காதலிக்கப் படுவதே
உண்மையில் சந்தோசம்

உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்






உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

முட்டி மோதி
கட்டிப் புறல்கயில்
வழியாதக் காதலை
புறியாதக் காதலை

அவளைப் பிறிந்த
நொடியினில் அறிய தொடங்குவாய்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

அவளைப் பிறிந்ததும்
அவளோடு சேர்த்து
உன் மனதையும்
துளைத்ததை உனர்வாய்

இல்லாத மனது
கனக்கக் காண்பாய்
இதய துடிப்பு
மெதுவடையும்

உயிருடன் இருக்கின்றாயா
என்று சோதனை செய்வாய்
நடமாடும் பினமாவாய்
பேசும் ஊமையாவாய்

நீ ஆனா என்றும் – உனக்கே
சந்தேகம் வரும்

அவளைப் பிறிந்ததும்

முதலில் கவிஞனாவாய்
ஆனால் கவிதை எழுத வராது
உன் கிருக்கல்களை கவிதை என்பாய்
கவிதைகளை கிருக்கல்கள் என்பாய்

உன் மூலையோ
எல்லாம் ஹார்மோன்களின் சேட்டைகள்
அவளை மறந்திவிடு
என்று மந்திரம் ஓதும்

உன் மனதோ
அவளே உனக்குள்ளே
ஓடும் உயிரென்றுக்கூறும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

இதுதால் காதலா என
உன்னையே நீ கேற்பாய்
உன்னையும் நம்பாம்மல்- உன்
நண்பனையும் கேட்ப்பாய்
ஆம் என்று பதில் வரும்

உன் கனவிலாவது
அவள் வரமாட்டாளா என
தினம் எதிர்ப்பார்த்து உறங்கச்செல்வாய்- ஆனால்
ஏமாற்றத்துடன்எழுவாய்

எதிர்ப்பாராமல் அவளைக்
காண மாட்டோமா என்று
எதிர்ப் பார்த்தே செல்வாய்

அவள் வீட்டின் நாயாவாய்
அவள் தெருவின் காவலனாவாய்
அவள் வளர்க்கும் ஆடும் மாடும்- உன்
உற்ற நண்பனாகும்

அவளுக்காக நடந்தே
உடல் இளைப்பாய்
உன்னோடு சேர்ந்து- உன்
செருப்பும் இளைக்கும்

அவள் உனக்கில்லை
என்றுத் தெரிந்தாலும்
அவளேக் காதலி
அவளைக் காதலி

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்