Monday, December 5, 2011

நட்பாக வேண்டும்.....

மழலைப் பருவத்தில்

பார்த்து வியக்க

ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்

... ஓடி விளையாட

ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்

ஊர் சுற்ற

ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்

பேசி ரசிக்க

ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்

நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது

தோள்களில் சாய

நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது

கண்ணீர் துடைக்க

நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது

மனம் மகிழ

நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க

நட்பே...

நீ எனக்கு

நட்பாக வேண்டும்.....


Saturday, December 3, 2011

மழை சிந்தும் வேளையில்....

மழை சிந்தும் வேளையில்

உன் கைகளில் மழை ஏந்து...

எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ

அந்த அளவு

நான் இருக்கிறேன் உன் மனதில்....

எந்த அளவு

துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு

நீ இருக்கிறாய் என் மனதில்.....



வாழ்க்கை மாறும்

உன் எண்ணத்தை மாற்று,

உன் நம்பிக்கை மாறும்;

உன் நம்பிக்கையை மாற்று,

உன் எதிப்பார்ப்பு மாறும்;

 உன் எதிர்பார்ப்பை மாற்று,

உன் மனப்பான்மை மாறும்;

உன் மனப்பான்மையை மாற்று,

உன் நடவடிக்கை மாறும்;

உன் நடவடிக்கையை மாற்று,

உன் செயல்திறன் மாறும்;

உன் செயல்திறனை மாற்று,

உன் வாழ்க்கை மாறும்...
--