Wednesday, July 20, 2011

நண்பர்கள் கவிதை



பட்டினி தேசம்


பசி... பசி... பசி...
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!

ஏனோ வயிற்றில் உருதெரியா
ஓர் வலி...
உயிர்கொல்லும் வலி...
உருவம் காணா உடல்
அதில் ஒட்டிய வயிறு...
மெல்லிய கால்கள்
விரல் தொலைத்த கைகள்
ஒளி மங்கிய கண்கள்...
இதுதான் எங்கள் தேசம்
கண்ணீர்.. உமிழ்நீர்...குடிநீர்...
பேதம் அறியா தேசம்
பட்டினி தேசம்...!

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி...
நீங்கள் எந்த தேசத்தையும்
அழிக்க வேண்டாம்...
எங்கள் தேசத்திற்கு உணவு
அளியுங்கள்...
பட்டினியை அழித்து...
நாங்களும் வாழ்ந்திட
மனிதர்களாக...!

மரம்...? மனிதம்...?

கொட்டும் பனியில்
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...

துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...

என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!

இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?

மௌனம்...


நீ அறிய நியாயமில்லைதான்...
















 

நதிகள்...

வரவேற்பு

இந்த மலர்கள் உன் வருகையை
எதிர்ப்பார்த்து தூவிய
மலர்கள்...

இனி உன்வாழ்வில் வசந்தம்
மணம்வீச தூவிய
மலர்கள்...

நேற்று மனதை வருடிய துன்பம்
இன்றகன்றிட தூவிய
மலர்கள்...

இனியெல்லாம் சுகமே என்று
வாழ்த்திட தூவிய
மலர்கள்...

உன் வருகைக்கு காத்திருந்து
நான் தூவிய அன்பு
மலர்கள்...

Monday, July 4, 2011

யாழ்_அகத்தியன் - - -ஈழத்து அகதியாய் நான்



அம்மா அங்கே
அம்மாக்காக அகதியாய்
இங்கே நான்
*
காணாமல் போனால்
கண்டுபிடித்து தருவார்கள்
பிணமாக
*
தினமும் இறப்பவர்களின்
பட்டியலில் சேரதவர்கள்
சுனாமியால் இறந்த
ஈழத்தமிழர்கள்
*
*
அம்மாவோடு ஆசையாய் பேச
தொலைபேசி எடுத்தால் அம்மா
கவலையாய் பேசுவதை கேக்கவே
நேரம் முடிந்துடும்
*
என் தாயை நான் பார்த்தே
இருபது வருசமாச்சு எப்படி
சொல்லிக் கொடுப்பேன்
என் பிள்ளைக்கு என் தாய்
எப்பிடி இருப்பா இன்று என்று
*
எப்ப அம்மா சொந்த ஊருக்கு
போவோம் பொறு போவோம்
இருபது வருசமா இதைத்தானே
அம்மா சொல்கிறாய்
*
தலைமுறைக்காகவே சம்மதிக்கிறாள்
திருமணத்துக்கு நாளை விதவை
ஆகலாம் என்று தெரிந்தும்
*

 
சமாதானம் என்றால்
என்ன அப்பா
சண்டைக்கான ஒத்திகை
மகனே